ருத்ரம்-1 (ஏவுகணை)
வானிலிருந்து தரை ஏவுகணைகள் · Rudram-1
தோற்ற நாடு
இந்தியா
உற்பத்தியாளர்Bharat Dynamics Limited
ருத்ரம்-1 (Rudram -1) என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை (ஏஆர்எம்) ஆகும். இது காற்றிலிருந்து மேற்பரப்பிற்கு எழும்பும், புதிய தலைமுறை கதிர்வீச்சு எதிர் ஏவுகணை (NGARM) ஆகும் இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) போர் விமானங்களுக்கு மேன்மையான ஒரு தந்திரோபாய திறனை வழங்கவும், முதன்மையாக எதிரிகளின் வான் வழி தாக்குதல்களை ஒடுக்குவதற்கான பாதுகாப்பிற்காக (SEAD) வடிவமைக்கப்பட்டுள்ளது, இது எதிரிகளின் கண்காணிப்பு ரேடார்கள், கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை அழிப்பதற்காக பல உயரங்களில் இருந்து ஏவப்படலாம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த அதிநவீன அதிவேக ஏவுகணை இந்திய விமானப்படை ஆயுதக் களஞ்சியத்தில் இதன் வகையில் முதலாவதாக உள்ளது. இந்த ஏவுகணையை பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (பி.டி.எல்) மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) இணைந்து தயாரிக்கப்பட்டதாகும்.





