மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262
போர் விமானங்கள் · Messerschmitt Me 262
தோற்ற நாடு
German Reich
உற்பத்தியாளர்Messerschmitt
மெசேர்ஸ்கிமிட் எம்.இ 262 ஸ்வபல்ப் (Messerschmitt Me 262 "Schwalbe") என்பது உலகின் முதலாவது பயன்பாட்டு தாரை இயக்க திறன்மிக்க சண்டை வானூர்தி ஆகும். இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாக முன்னர் வடிவமைப்பு ஆரம்பித்தாலும், 1944 இடைப்பகுதி வரை லூவ்ட்வவ்பேயில் (செருமன் வான் படை) பயன்பாட்டிற்கு வர பொறி சிக்கல்கள் தடையாகவிருந்தது. அக்கால நேச நாடுகளின் சண்டை விமானங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் வேகமானதாகவும் சிறப்பான ஆயுத அமைப்பு கொண்டதுமாகும். இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்பாட்டிலிருந்த பறப்பியல் வடிவமைப்புக்களில் இது மிகவும் முதற்தரமானவற்றில் ஒன்று. எம்இ 262 இலகு குண்டுவீச்சு விமானம், வான் வேவு மற்றும் சோதனை இரவு நேர சண்டை வானூர்தி ஆகிய பல உபயோகங்களைக் கொண்டிருந்தது.







