உலக இராணுவ வலிமை
← கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்

சூரியா தாக்குகணை

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் · Surya missile

தோற்ற நாடு இந்தியா
இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா
[Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல்
இராணுவப் பணிகள் ஆரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல்
திட்டமிடப்பட்டது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை
பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு :
10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு
20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம்
[130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிபொருள் பயன்படும்
மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ
எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும்
பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத்
துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு
யந்திர அமைப்புகளே.

விக்கிப்பீடியாவில் மேலும் படிக்க ↗

தொழில்நுட்ப விவரங்கள்

நீளம்
40.0 m
அறிமுக ஆண்டு
2020
சேவையில் இணைந்த ஆண்டு
2020

இந்த ஆயுதம் பற்றி →

ஒத்த மாதிரிகள்

அனைத்தையும் காண்க →

மாதிரித் தரவு: Wikidata (CC0) மற்றும் Wikipedia (CC BY-SA). ஒரே ஆயுதத்தின் வெவ்வேறு பதிப்புகளுக்கிடையே எண்கள் வேறுபடலாம். · Q3530393