லிட்டில் பாய்
அணு ஆயுதங்கள் · Little Boy
தோற்ற நாடு
அமெரிக்கா
லிட்டில் பாய் (ஆங்கிலம்: Little Boy; சின்னப் பையன்) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "கொழுத்த மனிதன்" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது வீசப்பட்டது.







